தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிதாக 12 அணு உலைகள் -அணு சக்தித் துறை - புதிதாக அணு உலைகள்

மும்பை: மின் சேவையில் தடையின்மை, மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்யும் பொருட்டு நாடு முழுவதும் கூடுதலாகப் பன்னிரண்டு அணு உலைகள் அமையவுள்ளதாக அணு சக்தித் துறை அறிவித்துள்ளது.

அணு உலை

By

Published : Apr 24, 2019, 10:55 AM IST

இதுகுறித்து அணு சக்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அணு சக்தி தொழில் நுட்பமானது பல்வேறு வகைகளில் உதவுகிறது. சுத்தமான, சுற்றுச்சூழலுக்குப் பாதகமற்ற சக்திகளை உருவாக்குவதற்கு இதனைவிட்டால் மாற்றேதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 962 நாட்கள் தடையின்றி செயல்பட்டுள்ள காய்கா அணு உலையானது, 99.3 விழுக்காடு திறனுடன் அமோகமாக மின் கத்தியை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் சேவையின் தடையின்மை, மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்யும் பொருட்டு நாடுமுழுவதும் கூடுதலாகப் பன்னிரண்டு அணு உலைகள் அமைக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details