தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவை ஆட்டிப்படைக்கும் கரோனா: மேலும் 12 பேருக்கு தொற்று உறுதி! - கேரளாவில் மேலும் 12 பேருக்கு கரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 more corona positive cases in kerala
12 more corona positive cases in kerala

By

Published : Mar 20, 2020, 7:35 PM IST

சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கோவிட்-19 (கரோனா) நோய்க் கிருமித் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்துவருகின்றன. இவ்வேளையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி கரோனாவால் அதிகம் உயிரிழப்புகள் கண்ட நாடாக இத்தாலி மாறியிருக்கிறது.

இத்தருணத்தில், கேரளாவில் முன்னதாக 28 நபர்களுக்கு கரோனா நோய்க் கிருமித் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதில் மூன்று பேர் குணமடைந்ததாக கேரள சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.

தற்போது மேலும் 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து மொத்தம் 37 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக கேரள அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதில் எர்ணாகுளத்தில் 5 வெளிநாட்டவரும், காசர்கோட்டிலிருந்து 5 பேருக்கும், பாலக்காட்டிலிருந்து ஒருவருக்கும் இத்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details