பாஜகவின் எடியூரப்பா நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ள நிலையில், கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 14 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை அவையிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளார்.
14 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம்! - Congress
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 14 சட்டப்பேரவை உறுப்பினர்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்துள்ளார்.

ரமேஷ் குமார்
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் ஆர். சங்கர், ரமேஷ் ஜார்கியோலி, மகேஷ் குமதல்லி ஆகிய மூன்று அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டிருந்தார்.
இதில் சங்கர் சுயேச்சையாக வெற்றிபெற்று, காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் ஆவார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த மூன்று பேரும் என மொத்தமாக இதுவரை 17 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Last Updated : Jul 28, 2019, 12:56 PM IST