தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா - ரூ. 9.4 லட்சம் நிதி திரட்டிய ஹைதராபாத் சிறுமி! - ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழைகள்

கோவிட்-19 வைரசைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு உதவ ஹைதராபாத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, ரிதி என்பவர் 9.4 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.

Hyderabad girl
Hyderabad girl

By

Published : Apr 16, 2020, 4:29 PM IST

Updated : Apr 16, 2020, 4:58 PM IST

கோவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பலரும் உதவிவருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவ ஹைதராபாத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ரிதி 9.4 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளார். ஆறாம் வகுப்பு மாணவியான ரிதி, Milaap என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி இந்த தொகையைச் சேகரித்துள்ளார்.

இது குறித்து ரிதியின் தாயார் ஷில்பா கூறுகையில், "ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, ​​என் மகள் தனது தேவைகளைப் பூர்த்தி செய்வது குறித்து மட்டுமே கவலைப்பட்டாள். ஆனால், ஏழைகள் படும் கஷ்டங்கள் குறித்து செய்திகளைப் பார்த்ததும், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று அவள் எண்ணினாள்.

அவளது சேமிப்பு பணத்தை முதலில் வழங்கினாள். அதன் பின்னர், அத்தியாவசிய தேவைகளான அரிசி, பருப்பு, உப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய தொகுப்பை 200 ஏழைகளுக்கு அவர் விநியோகித்தாள்" என்றார்.

முன்னதாக, ஏப்ரல் 2ஆம் தேதி சைபராபாத் காவல் துறையின் உதவியுடன் 200 ஏழைகளுக்கு அத்தியாவசிய பொருள்களை ரிதி வழங்கினார். இதுவரை, அவர் 725 தொகுப்புகளை ஹைதராபாத்திலுள்ள ஏழைகளுக்கு விநியோகித்துள்ளார்.

இதையும் படிங்க: மருத்துவ பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் - பதறும் ராகுல்!

Last Updated : Apr 16, 2020, 4:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details