கரோனா நோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. பெருந்தொற்றால் பல மாற்றங்கள் நிகழ்ந்து சவால்கள் உருவாகியுள்ளன. இதனை எதிர்கொள்ளும் வகையிலான புதிய கருவிகளை கண்டுபிடிப்பதற்கான திட்டங்களை வகுக்க இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள் ஒன்றிணையவுள்ளனர்.
இது குறித்து அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "மருத்துவப் பரிசோதனை, வைரஸ் தடுப்பு சிகிச்சை, புதிய மருந்து, வென்டிலேட்டர் ஆராய்ச்சி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை சென்சார் மூலம் கண்டறிவது உள்ளிட்டவற்றை மேம்படுத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள் அடங்கிய 11 குழு செயல்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம், கரோனா சவால்களை எதிர்கொள்ள விஞ்ஞானிகள் புதிய திட்டங்களை வகுத்து அனுப்பும்படி அமெரிக்க இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மேலாண்மை நிதியம் அறிவிப்பு வெளியிட்டது.