தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானா மூசி நதி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 11 லாரிகள்! - Telangana flood

ஹைதராபாத்: தெலங்கானாவில் பெய்த கனமழையின் காரணமாக மூசி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 11 லாரிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.

or
or

By

Published : Oct 15, 2020, 3:45 PM IST

தெலங்கானா மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாமல் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, ஹைதராபாத் நகரம் வெள்ளத்தில் மிதந்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தற்போது, மழை குறைந்ததையடுத்து பல இடங்களில் தண்ணீர் வடியத்தொடங்கியுள்ளது. வெள்ளப்பாதிப்பை சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் தெலங்கானா அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள மூசி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 11 லாரிகள், ஒரு கார், டிராக்டர் ஆகியவை நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. மேலும், அருகிலிருந்த விவசாய நிலங்கள் அனைத்தும் கனமழையில் முற்றிலுமாக நாசமாகியுள்ளன.

சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், சீரமைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிங்க: மழை வெள்ளத்தால் சூழப்பட்ட ஹைதராபாத்: மாநில அரசுடன் இணைந்து ராணுவம் மீட்புப் பணி!

ABOUT THE AUTHOR

...view details