ஹைதராபாத்தில் ரூ.3 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்! - hyderabad
ஹைதராபாத்: ஹைதராபாத் விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புடைய 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து விமான நிலையத்தில் உள்ள பயணிகளை விமான நிலைய அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் பயணியிடமிருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த பயணி தங்கி இருந்த விடுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பெண் பயணிடம் வருவாய் நுண்ணறிவு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.