மத்தியப் பிரதேச மாநிலம் கட்லபுரா காட் அருகே ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க பக்தர் படகு மூலம் இன்று அதிகாலை சவாரி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நீரில் மூழ்கிய 16 பேரில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மீட்புப்பணியில், மாநில காவல் துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழப்பு இதனிடையே ஊடகங்களுக்கு பேட்டியளித்த அம்மாநில சட்டத் துறை அமைச்சர் பி.சி. ஷர்மா, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், எதிர்பாராதவிதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.