தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா அச்சுறுத்தல்: நிதியுதவி அளித்த பத்தாம் வகுப்பு மாணவி

பாட்னா: கரோனா வைரஸ் நோய் தடுப்புக்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தனது சேமிப்பிலிருந்து நிதியுதவி வழங்கியுள்ளார்.

Piggy Bank
Piggy Bank

By

Published : Apr 1, 2020, 9:57 AM IST

Updated : Apr 1, 2020, 4:40 PM IST

கரோனா வைரஸ் நோய் இந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. இதுவரை 1,397 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடேயே, நோய் தடுப்புக்காகத் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு பிரதமர் மோடி கோரிக்கைவிடுத்தார். இதனைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்துவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பிகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷம்பவி சேகர் தனது பிறந்த நாளுக்கு சேர்த்துவைத்த பணத்தை கரோனா வைரஸ் நோய் தடுப்புக்காக வழங்கியுள்ளார்.

கடந்த ஒரு ஆண்டாக சேர்த்துவைத்த பணத்தை மாவட்ட நீதிபதி பிரணவ் குமாரிடம் அளித்தார். ஊரடங்கால் அவதிக்குள்ளாகும் ஏழை மக்களுக்கு மற்றவர்கள் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

ஷம்பவி சேகரின் செயலை முன்னாள் துணை மேயர் பிரித்தி சேகர் பாராட்டியுள்ளார். பேரிடர் காலத்தில் மக்கள் தாமாக முன்வந்து உதவி செய்துவருகின்றனர். இப்பொழுது தனது சேமிப்பிலிருந்து நிதியுதவி அளித்துள்ள ஷம்பவி சேகரைப் போல பிறரும் முன்வர வேண்டும் என வேண்டுகோள்விடுக்கிறேன் எனத் தெரிவித்தார்.

மேலும், அதே போன்று பல பிரபலங்கள், தொழில்முனைவோர் கோவிட்19-க்கான நிதி திரட்டுவதில் அரசுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவு: வீட்டிற்குச் செல்ல 200 கி.மீ., நடந்த கர்ப்பிணி

Last Updated : Apr 1, 2020, 4:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details