தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவை வென்ற 105 வயது மூதாட்டி!

கொப்பலா: கர்நாடக மாநிலம் கொப்பலா மாவட்டத்தைச் சேர்ந்த 105 மூதாட்டி கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ள சம்பவம் பலருக்கும் புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

By

Published : Sep 12, 2020, 1:33 PM IST

105-year-old-woman-beats-corona-in-koppala
105-year-old-woman-beats-corona-in-koppala

கர்நாடக மாநிலம் கொப்பலா மாவட்டத்தின் அருகில் உள்ள கத்தார்கி கிராமத்தைச் சேர்ந்த 105 வயதாகும் மூதாட்டி கமலாம்மா. இவருக்கு கடந்த சில நாள்களாக அதிக காய்ச்சல் இருந்த நிலையில், கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தப் பரிசோதனையின் முடிவில் கரோனா தொற்று உறுதியான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது மகன் சங்கர கவுடா மூலம், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கமலாம்மாவுக்கு அவரது பேரன் ஸ்ரீநிவாசா ஹட்டி (மருத்துவர்) வீட்டிலேயே சிகிச்சை வழங்கியுள்ளார். ஒரு வாரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் எதிர்மறையாக வர, 105 வயது மூதாட்டி கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார்.

105 வயது மூதாட்டி கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உலகளவில் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 8,29,666ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details