ஹிமாசல் பிரதேச மாநிலம் கப்லா மாவட்டத்தில் வசிப்பவர் ஷ்யாம் சரன் நேகி. 1917 ஆம் ஆண்டு பிறந்த இவர் தான் இந்தியாவின் மிக வயதான வாக்காளர்.சுதந்திரத்திற்குப் பின் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலான 1951 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்களித்த இந்த தாத்தா, அதன் பின் வந்த அனைத்து சட்டமன்ற,மக்களவைத் தேர்தல்கள் அனைத்திலும் தவறாமல் வாக்களித்துள்ளார். அத்துடன், தேர்தல் தேதி அறிவித்தவுடன் வரப்போகும் மக்களவைத் தேர்தலில் தனது கின்னூர் தொகுதியில்வாக்களிக்க102 வயதிலும் ஆர்வத்துடன் தயாராக உள்ளார். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேர்தல் நடைபெற உள்ளது.
102 வயதிலும் ஜனநாயகக் கடமையாற்றும் தாத்தா! - ஷ்யாம் சரன் நெகி
சிம்லா: நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட்ட 102 வயது ஷ்யாம் சரன் நெகி வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் ஆர்வத்துடன் வாக்களிக்க உள்ளார்.
Shyam
தேர்தல் நாள் என்பது தமக்குக் கிடைத்த பொது விடுமுறை எனக்கருதிப் படித்தவர்கள் பலர் வாக்குச்சாவடிக்குச் செல்லாமல் ஓய்வெடுக்கும் நம் நாட்டில் இது போன்றமனிதர்களும் வசிப்பதும் நம்பிக்கையூட்டும் செய்தி தானே.