சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தற்போதுள்ள மாவட்டத்திலேயே தேர்வு - 10,12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ
17:28 May 27
டெல்லி: 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது அவர்கள் உள்ள மாவட்டத்திலேயே தேர்வு எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது அவர்கள் இருக்கும் மாவட்டங்களிலேயே தேர்வை எழுதலாம். ஊரடங்கு காரணமாக வெளி மாநிலங்களுக்கு சென்று இருந்தாலும் அங்கேயே தேர்வு எழுதிக்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:சிபிஎஸ்சி தேர்வு மையங்கள் 12 ஆயிரமாக உயர்வு