தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்லையில் காத்திருக்கும் 10,000 தொழிலாளர்கள்!

லக்னோ: ராஜஸ்தானைச் சேர்ந்த 10,000 தொழிலாளர்கள் உத்தரப் பிரதேச எல்லையில் காத்திருக்கின்றனர்.

10,000 panicked labourer reaches Saiyan border, UP CM asks to wait till order
10,000 panicked labourer reaches Saiyan border, UP CM asks to wait till order

By

Published : Mar 31, 2020, 2:44 PM IST

கரோனா வைரஸ் எதிரொலியால், நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வெவ்வேறு மாநிலங்களில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதில் சிலர் நடைப்பயணம் மூலமாக தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் வேலை பார்த்த 10ஆயிரம் பேர் 500 கிலோ மீட்டர் நடைப்பயணமாக உத்தரப் பிரதேச மாநில எல்லையான டோல்பூருக்கு வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராகேஷ் குமார் கூறுகையில், “முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்த பின்னர்தான் அவர்கள் அனுமதிக்கப்படுவர். முதலமைச்சர், உள்துறை அமைச்சரின் உத்தரவிற்கு காத்திருக்கிறார்” என்றார்.

இதையும் படிங்க....நிஜாமுதீன் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட மக்களுக்கு கரோனா சோதனை!

ABOUT THE AUTHOR

...view details