கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியது! - கோவிட் 19
20:26 March 29
டெல்லி: இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இருப்பினும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தற்போது, கோவிட்-19 வைரஸ் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தற்போது வரை 1,024 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 95 பேர் சிகிச்சை நிறைவடைந்து பூரண குணமடைந்துள்ளனர். 901 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 29) மாலை செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்ளிட்ட எட்டு பேருக்கு இன்று கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.