தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 27, 2020, 2:21 PM IST

Updated : Jun 27, 2020, 2:54 PM IST

ETV Bharat / bharat

'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - கரோனாவுக்கு டாட்டா சொன்ன 100 வயது பாட்டி!

கர்நாடகா: பெங்களூருவில் 100 வயது மூதாட்டி கரோனா தொற்று சிகிச்சையிலிருந்து குணமடைந்துள்ளார்.

கரோனாவிலிருந்து மீண்டு வந்த 100 வயது பெண்
கரோனாவிலிருந்து மீண்டு வந்த 100 வயது பெண்

கரோனா வைரஸ் (தீநுண்மி) குறித்து அரசும், மருத்துவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர், ஆனால் அச்சம் காரணமாக பலர் மருத்துவமனைக்குச் செல்ல தயங்குகிறார்கள். அதிக வயதுடையவர்கள் விரைவில் இந்தத் தீநுண்மியால் பாதிக்கப்படுகிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மார்சலின் சல்தானா என்ற 100 வயது மூதாட்டி கரோனா தீநுண்மி தொற்றிலிருந்து மீண்டுவந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

கோவிட்-19 காரணமாக மார்சலின் சல்தானா கடந்த ஜூன் 18 அன்று விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வெறும் ஒன்பது நாள்களில் இந்தத் தீநுண்மிக்கு எதிரான போரில் வெற்றிபெற்றுள்ளார்.

தற்போது இவர்தான் கர்நாடகாவிலேயே கரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று குணமடைந்த மிகவும் வயதானவர் என்பது கூடுதல் சிறப்புத் தகவல்.

Last Updated : Jun 27, 2020, 2:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details