தமிழ்நாடு

tamil nadu

அரபு நாடுகளில் வசித்த 100 கேரள மக்கள் கரோனாவால் இறப்பு!

By

Published : May 24, 2020, 10:07 AM IST

திருவனந்தபுரம்: அரபு நாடுகளில் தங்கி பணிபுரிந்து வந்த 100 கேரள மக்கள் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

100 Keralaites dead in ME from Covid
100 Keralaites dead in ME from Covid

கரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அரபு நாடுகளில் வாழும் 100 கேரள மக்கள் கரோனா வைரஸ் பெருந்தோற்றல் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் 62, குவைத்தில் 18, சவுதி அரேபியாவில் 17 , ஓமனில் 2 , கத்தாரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கேரள அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக கேரளாவை சேர்ந்த பெரும்பாலான மக்கள் அரபு நாடுகளில்தான் அதிகமாக பணிபுரிந்து வருகின்றனர். கேரள பொருளாதாரம் உயர்வை சந்திப்பதற்கு முக்கிய காரணம் அரபு நாடுகள்தான். கிட்டத்தட்ட கேரளாவை சேர்ந்த நான்கு லட்சம் பேர் அரபு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அரபு நாடுகளில் நிகழ்ந்த இந்த 100 பேரின் இறப்பு கவலையளிக்கிறது என கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ரிசர்வ் வங்கி வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும் - ராமதாஸ் வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details