கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் வசித்து வரும் அபின்(5), தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார். இவர் தனது சைக்கிளையும் அவர் அண்ணன் உபயோகித்த சைக்கிளையும் அப்பகுதியில் இயங்கும் சைக்கிள் கடையில் சரி செய்யக் கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி கொடுத்துள்ளார். இதற்கு முன்பணமாக ரூ. 200 அவர்களிடம் கடைக்காரர் பெற்றுள்ளார்.
ஆனால், கடைக்காரர் சைக்கிளை ரிப்பேர் செய்து கொடுப்பதற்கு தாமதம் ஆக்கியுள்ளார். சிறுவர்கள் தொலைபேசியில் அவரை அழைத்தாலும் எடுக்கவில்லை. மேலும், கடைக்கு சென்று நேராகப் பார்க்கலாம் எனச் சிறுவர்கள் செல்லும் போது, கடை மூடியே இருந்தது. இதனால் என்ன செய்யலாம் என யோசித்த சிறுவர்கள் காவல் துறையை அணுக முடிவெடுத்தனர்.
இதனையடுத்து, சிறுவன் அபின் தனது கையால் எழுதிய புகாரை மெப்பையுர் காவல் நிலையத்தில் அளித்தான்.