வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு இந்த தினத்தில் நாட்டின் முக்கியத் தொழிற்சங்கள் பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளன.
ஐ.என்.டி.யூ.சி, ஏ.ஐ.டி.யூ.சி, எச்.எம்.எஸ், சி.ஐ.டி.யூ, எல்.பி.எஃப். உள்ளிட்ட நாட்டின் பத்து முக்கியத் தொழிற்சங்கங்கள் இந்தியாவை காப்பாற்றுங்கள் என்ற முழக்கத்துடன் 'Save India Day' என்ற பெயரில் இந்த நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கின்றன.
மக்கள் விரோத, தொழிலாளர் விரோத செயல்பாடுகளை மேற்கொள்ளும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சக்தியாக இந்த தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தவுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே, சுரங்கம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனியார்மய கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுவரும் நிலையில், இந்த போராட்டமானது நடத்தப்படவுள்ளது. மேலும் இந்த போராட்டங்கள் வரும் செப்டம்பர் மாதமும் தொடரும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:இந்தியா, அமெரிக்கா இடையே விரைவான வர்த்தக ஒப்பந்தம்!