கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிகார் மாநிலத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அம்மாநில வைஷாலி மாவட்டத்திலுள்ள ஹாஜிபூர் பகுதியில் ஊரடங்கை மீறி மதுபானம் விற்கப்படுவதாக திசியாட்டா காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
பிகாரில் காவல்துறையினர் மீது கல் வீச்சு: 10 காவலர்கள் படுகாயம் - மதுபான விற்பனை போது கல் வீச்சு
பாட்னா: வைசாலி மாவட்டத்தில் மதுபான சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் 10 பேர் மீது மதுபான விற்பனையாளர்கள் கற்களால் தாக்கியுள்ளனர்.
அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையின் போது, மது விற்பனையாளர் காவல்துறையினரை கற்களால் தாக்கியுள்ளனர். அதில் 10 காவலர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சென்ற நான்கு சக்கர வாகனமும் சேதமடைந்தது.
அதனையடுத்து அவர்கள், படேப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று திரும்பினர். இதுகுறித்து காவலர் ஒருவர் கூறுகையில், "காவல்துறையினரைத் தாக்கியவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். அவர்களைப் பிடிக்க தனிக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.