தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மருத்துவ படிப்பில் 10% உள் ஒதுக்கீடு! - மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை

புதுச்சேரி: மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

puducherry cabinet meet
puducherry cabinet meet

By

Published : Oct 27, 2020, 9:50 AM IST

முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டம், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் மற்றும் அனைத்து துறை செயலர்களும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்பிட சம்மந்தப்பட்ட துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடத்துவதால் அரசு பள்ளியில் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details