பிகார் மாநில தலைநகர் பாட்னா அருகேயுள்ள குர்ஜி பகுதியில் சந்தேகத்திற்குரிய ஆள்கள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவலர்களுக்கு புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர்கள் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் உரிய பயண ஆவணங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அவர்களை விடுவித்தனர். எனினும் அவர்களின் ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனை ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து காவலர் கூறுகையில், “கிர்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 10 பேர் மட்டுமின்றி இந்திய சுற்றுலா வழிகாட்டிகள் இருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.