தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவாவில் அரசியல் புயல்: 10 காங். எம்எல்ஏக்கள் அமித் ஷாவுடன் சந்திப்பு! - பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷா

பனாஜி: கோவா மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 10 பேர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில் இன்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளனர்.

கோவாயையும் தாக்கும் அரசியல் குழப்பம்: 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமித்ஷாவுடன் சந்திப்பு!

By

Published : Jul 11, 2019, 11:53 AM IST

கோவாவில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 15 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் பாஜக இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் தெலங்கானா, கர்நாடகாவைத் தொடர்ந்து கோவா அரசியலிலும் தற்போது புயல் வீசத் தொடங்கியுள்ளது. கோவா மாநிலம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். இந்நிலையில், அவர்கள் 10 பேரும் இன்று பாஜக தலைவரும் மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்திக்கவுள்ளனர்.

இது குறித்து கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறுகையில், எம்எல்ஏக்கள் பத்து பேரும் இன்று அமித் ஷாவை சந்திக்கின்றனர் எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details