சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 வெளிநாட்டவர்களுக்கும், 65 இந்தியர்களுக்கும் கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் ஹரியானாவில் மட்டும் 14 பேருக்கு கோவிட் -19 வைரஸ் பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது.