தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இதுவரை 41 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை - ஐசிஎம்ஆர்

டெல்லி: நாட்டில் இதுவரை 41 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

Coronavirus test
Coronavirus test

By

Published : Jun 3, 2020, 4:58 PM IST

சென்ற 24 மணி நேரத்தில் நாட்டில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 158 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் இதுவரை 41,03,233 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை, நாடு முழுவதும் கரோனா பரிசோதனை செய்ய மொத்தம் 681 ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 476 அரசு ஆய்வகங்களும், 205 தனியார் ஆய்வகங்களும் அடங்கும்.

மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, நேற்று ஒரே நாளில் புதிதாக 8,909 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,07,615ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை இத்தொற்றால் 5,815 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,00,303 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது 1,01,497 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details