மும்பையின் தாராவி பகுதியில் உள்ள பிஎம்ஜிபி காலனியில் புதிதாக கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்ததோடு, மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி! - 1 dead
மும்பை: புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்று பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலி
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பலத்த காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாராவி பகுதியில் சட்டவிரோதமாக தொடர்ந்து கட்டடம் கட்டப்பட்டு வருவதால் இதுபோன்ற விபத்துக்குள் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.