தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் தொடர இருக்கும் பாரத் ஜோடா யாத்திரையில் ராகுல் உரை - மகாராஷ்டிரா மாநிலத்தில்

நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடா யாத்திரை மகாராஷ்டிராவில் நுழைய உள்ளது.

Etv Bharatமகாராஷ்டிராவில்  தொடர இருக்கும்  பாரத் ஜோடா யாத்திரை  - பேரணியில் ராகுல் காந்தி உரை
Etv Bharatமகாராஷ்டிராவில் தொடர இருக்கும் பாரத் ஜோடா யாத்திரை - பேரணியில் ராகுல் காந்தி உரை

By

Published : Nov 5, 2022, 7:29 PM IST

மும்பை(மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நவம்பர் 10 மற்றும் 18ஆம் தேதிகளில் நடக்க இருக்கும் பாரத் ஜோடோ யாத்திரை பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதுமான ஒற்றுமை நடைப்பயணத்தை (பாரத் ஜோடா யாத்திரை) ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7 அன்று கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். இந்த நடைபயணம் மகாராஷ்டிராவில் தொடர உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பாலா சாகேப் தோரட் கூறுகையில், ‘பல மாநிலங்களை கடந்த ராகுல் காந்தியின் நடைபயணம் தெலங்கானாவில் இருந்து வரும் நவம்பர் 7ஆம் தேதி இரவு 7 மணிக்கு மகாராஷ்டிராவின் நாந்தேட் மாவட்டத்தில் நுழைகிறது. நவம்பர் 10ஆம் தேதி நான்டெட் மாவட்டத்தில் நடக்க உள்ள பேரணியிலும், நவம்பர் 18 ஆம் தேதி புல்தானா மாவட்டத்தில் உள்ள ஷேகானில் நடைபெற உள்ள பேரணியிலும் ராகுல் உரையாற்ற உள்ளார்.

மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள தொடங்கப்பட்ட முயற்சியே இந்த பாரத் ஜோடா யாத்திரை. மகாராஷ்டிரா மாநிலத்தில் 14 நாள்கள் நடக்கிறது. 15 சட்டமன்ற மற்றும் 6 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக செல்ல உள்ளது. நவம்பர் 20ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நுழைகிறது. இந்த பேரணிக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க;பிரதமரும் தெலங்கானா முதலமைச்சரும்..? ராகுல் காந்தி விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details