இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியால், எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என லான்செட் மருத்துவ இதழில் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வில், கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறனை இரண்டாம் கட்டச் சோதனையில் தீர்மானிக்க முடியாது. இருப்பினும், கோவாக்சின் தடுப்பூசியால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இந்த தடுப்பூசியின் பாதுகாப்பை முழுவதுமாக தீர்மானிக்க, விரிவான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை தேவைப்படுகிறது. குறைந்த அளவிலே சீரம் மாதிரிகள் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வை மேற்கொள்ளமுடியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர்.