தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவாக்சினில் 77.8 விழுக்காடு செயல்திறன்!

கோவாக்சின் தடுப்பூசியில், 77.8 விழுக்காடு செயல்திறன் இருப்பது மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

Bharat Biotech's Covaxin shows 77.8 pc efficacy in Phase III trials, say sources
கோவாக்சினில் 77.8 விழுக்காடு செயல்திறன்!

By

Published : Jun 22, 2021, 6:41 PM IST

டெல்லி:மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய மூன்றாம் கட்ட பரிசோதனையில், கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி 77.8 விழுக்காடு செயல்திறனை கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, தடுப்பூசியின் மூன்றாம் கட்ட தரவுகளை சமர்ப்பிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக, பல்வேறு கேள்விகள் எழுந்தன.

அதேபோன்று கோவிஷீல்டை காட்டிலும், கோவாக்சின் தாமதமாகவும், குறைவான நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குகிறது என்ற கருத்தும் பரவலாக எழுந்தது.

அப்போது மூன்றாம் கட்ட ஆராய்ச்சிக்கு காத்திருக்க வேண்டும் என, மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனையில் கோவாக்சின் (Covaxin) தடுப்பூசி 77.8 விழுக்காடு செயல்திறனை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போதுள்ள மூன்று தடுப்பூசிகளில், கோவாக்சினும் ஒன்றாகும். மற்ற இரண்டு தடுப்பூசி, சீரம் நிறுவன தயாரிப்பான கோவிஷீல்ட், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக் ஆகியவை ஆகும்.

இந்தியாவில், இதுவரை 28 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம், இம்மாத (ஜூன்) இறுதிக்குள் 2.6 கோடி தடுப்பூசி குப்பிகள் உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:'4000 டோஸ் கோவாக்சின் ஃப்ரீ' - கற்ற இடத்திற்கு உதவி செய்த பாரத் பயோடெக் நிறுவனர்!

ABOUT THE AUTHOR

...view details