அவசரகாலப் பயன்பாட்டுக்கு 'கோவாக்சின்' தடுப்பூசியை உபயோகிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் அலுவலர்கள், பாரத் பயோடெக் நிறுவனம் இடையேயான கூட்டம் இன்று (ஜூன்.23) நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் தடுப்பூசி தயாரிப்பு முறை குறித்து விரிவாக மதிப்பாய்வு செய்யப்படாது என்றும், ஆனால் தடுப்பூசியின் தரம் குறித்த சுருக்கமான விளக்கத்தை முன்வைக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகாலப் பயன்பாட்டுக்கான உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை செப்டம்பர் மாதத்திற்குள் பெற்றுவிடுவோம் என பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருந்தது.