டெல்லி : கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் கோவிட்-19 வைரஸின் புதிய மற்றும் மிகவும் கொடிய பதிப்பான ஒமைக்ரான் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி ஒமைக்ரானுக்கு எதிராக செயல்படுமா என்பதை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தடுப்பூசி நிறுவனமான பாரத் பயோடெக் ஆய்வு செய்து வருகிறது.
உலக சுகாதார அமைப்பால் ஒமைக்ரான் (Omicron) எனப் பெயரிடப்பட்ட SarS-CoV-2 வைரஸ் அதிக பரவக்கூடிய தன்மை கொண்டதாகும். இதனால் உலக சகாதார அமைப்பு ஒமைக்ரான் மாறுபாடு குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை மணிகளை எழுப்பியுள்ளது.
பல நாடுகள் வெளிநாட்டினரின் நுழைவைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் வைரஸைக் கண்டறிய கண்காணிப்பை அதிகரிக்கின்றன. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சில ஆசிய நாடுகளைப் போல கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் பரவலால் ஆப்பிரிக்க நாடுகள் அதிகம் பாதிக்கப்படவில்லை.