பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று(ஜன.3) வழங்கியது. இந்நிலையில், தடுப்பூசிகளை தயாரிக்கும் வகையில் நான்கு உற்பத்தி கூடங்கள் அமைக்கப்படும் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார்.
கோவாக்சின் குறித்த போதுமான தரவுகள் சமர்பிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவர் போதுமான தகவல்கள் அனைத்தும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஓராண்டுக்கு, 700 மில்லியன் டோஸ்களை தயாரிக்கும் வகையில் இந்த நான்கு உற்பத்தி கூடங்கள் அமைக்கப்படவுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பு கூடத்தில் மட்டும் ஓராண்டுக்கு 200 மில்லியன் டோஸ்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.