டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் இன்ட்ராநாசல் கரோனா தடுப்பு மருந்துக்குரூ. 800 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையுடன் ஜிஎஸ்டி, மருத்துவமனை கட்டணங்களும் கூடுதலாக விதிக்கப்படும். இந்த தடுப்பூசி அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு டிசம்பர் 23ஆம் தேதி இன்ட்ராநாசல் கரோனா தடுப்பு மருந்துக்குஒப்புதல் அளித்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக இன்ட்ராநாசல் தடுப்பு மருந்தைசெலுத்திகொள்ளலாம். முதல்கட்டமாக தனியார் மருத்துவமனைகள் மூலம் மக்கள் செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை Co-WIN செயலி மற்றும் இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த இன்ட்ராநாசல் தடுப்பு மருந்தின்மூன்றாம் கட்ட பரிசோதனை ஆகஸ்ட் 15ஆம் தேதி வெற்றிகரமாக முடிந்தது.