தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவாக்சினுக்கு உலக அங்கீகாரம் - பாரத் பயோட்டெக் தலைவர் பெருமிதம் - கிருஷ்ணா எல்லா

நாட்டிற்கும் பாரத் பயோட்டெக் நிறுவனத்திற்கும் உலக அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பாரத் பயோட்டெக் நிறுவனத் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.

Bharat Biotech
Bharat Biotech

By

Published : Nov 4, 2021, 9:19 AM IST

இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோட்டெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கோவிட்-19 தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரக் கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிறுவனம் தனது மூன்றாம் கட்ட பரிசோதனை தகவல்களை ஜூலை மாதம் உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பித்தது.

அமைப்பு தனது ஆய்வை தொடங்கி அக்டோபர் மாத இறுதியில் ஒப்புதலுக்கான அறிவிப்பை வெளியிடவுள்ளதாகக் கூறியிருந்தது. இந்நிலையில், நேற்று அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதலை கோவாக்சின் பெற்றது.

இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறுகையில், "இதை சாத்தியப்படுத்திய விஞ்ஞானிகள், ஊழியர்கள், குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கு பாராட்டுகள். நமது நிறுவனத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இது நிறுவனத்தின் தரம், பாதுகாப்பு தன்மை குறித்து மக்களிடம் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்" எனக் கூறியுள்ளார். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, சுகாதாரத்துறை அமைச்சகம், அமைச்சக அலுவலர்களுக்கும் கிருஷ்ணா எல்லா தனது நன்றியை தெரிவித்தார்.

கிருஷ்ணா எல்லா மகிழ்ச்சி

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. பிரதமர் மோடி கோவிக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.10 விலை குறைப்பு - மத்திய அரசு அதிரடி

ABOUT THE AUTHOR

...view details