தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’கோவாக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஜூலைக்குள் ஒப்புதல் தரும்’ - பாரத் பயோடெக் நம்பிக்கை

கோவாக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஜூலை மாதத்துக்குள் ஒப்புதல் தரும் என பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Bharat Biotech
Bharat Biotech

By

Published : May 25, 2021, 8:45 PM IST

இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசி, ஆஸ்ட்ரா செனாக்காவின் கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில், கோவாக்ஸின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகும்.

இந்தத் தடுப்பூசியை சர்வதேச பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, பிரேசில், ஹங்கேரி உள்ளிட்ட சுமார் 60 நாடுகளில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக சுகாதார அமைப்பிடமிருந்து இதற்கான ஒப்புதல், வரும் ஜூலை-செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பாரத் பயோட்டெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:கரோனாவுக்கு ட்ரம்ப் சாப்பிட்ட மருந்து, இந்தியாவிலும் விற்பனை: ஒரு டோஸ் விலை தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details