கரோனாவுக்கு எதிரான போரின் முக்கிய கட்டமாக பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோவாக்சின் என்ற தடுப்பூசியை தயாரித்தது. இந்த தடுப்பூசியின் சோதனைப் பணிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்நிலையில், மூன்றாம்கட்ட சோதனையில் 26 ஆயிரம் தன்னார்வலர்களை ஈடுபடுத்தும் வகையில் கூடுதலாக 13 ஆயிரம் தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாரத் பயோடெக் வெளியிட்ட அறிக்கையில், "கோவாக்சின் முதலாம் மற்றும் இரண்டாம்கட்ட சோதனையில் 1,000 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். வைரஸை எதிர்த்து போராடும் வகையில் பாதுகாப்பான முடிவுகள் கிடைத்துள்ளன. மிகவும் சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடித்து வேரோ செல்கள் மூலம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துள்ளோம். மொத்தம் 300 மில்லியன் (30 கோடி) டோஸ்களை தயாரித்துள்ளோம். கோவாக்சினை இரண்டு டோஸ்களாக வழங்க வேண்டும்.