தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

22 நகரங்களுக்கு செல்லும் இரண்டாம் கட்ட கோவாக்சின் தடுப்பூசி - இரண்டாம் கட்ட கோவாக்சின் தடுப்பூசி

கோவாக்சின் இரண்டாம் கட்ட தடுப்பூசி நாடெங்கிலும் உள்ள 22 நகரங்களுக்கு அனுப்பப்படவுள்ளது.

Bharat Biotech begins dispatch of Covaxin doses
Bharat Biotech begins dispatch of Covaxin doses

By

Published : Jan 22, 2021, 2:16 PM IST

பாரத் பயோடெக்கின் 25 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை நாடெங்கும் உள்ள 22 நகரங்களுக்கு அனுப்பப்பட உள்ளது. அரசின் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் சீரம் இன்ஸ்டிட்யூட் உடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் ஜனவரி 16ஆம் தேதியன்று தடுப்பூசி போடும் பணிகளை தொடங்கியது.

சுமார் 25 லட்சத்தும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ் அனுப்பப்படவுள்ளன. இந்த டோஸ்கள் ஹைதராபாத்தில் இருந்து சென்னை, கொல்கத்தா, மும்பையில் உள்ள மருத்துவ அங்காடிகளுக்கு அனுப்பப்படும்.

இது கூடுதலாக டெல்லி, ராய்ப்பூர், ராஞ்சி, திருவனந்தபுரம், சண்டிகர், பெங்களூரு, புனே, புவனேஸ்வர் உள்ளிட்ட இடங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

தடுப்பூசி போடுவது மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், இது கரோனா முன்கள பணியாளர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டது. பல மருத்துவர்கள் வதந்திகளையும் தயக்கத்தையும் போக்க தடுப்பூசி எடுத்துக்கொண்டனர்.

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி கோவாக்சின் ஆகும்.

இதையும் படிங்க... பள்ளிகளில் சுகாதார விதிமுறைகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details