டெல்லி: மத்திய அரசு சில தினங்களுக்கு முன் அக்னிபாத் எனும் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அரசின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் முறையை மாற்றி அமைத்து அரசின் பளுவை குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது. இருப்பினும் இத்திட்டத்தின் கீழ் சேருவோருக்கு பணி நிரந்தரமின்மை மற்றும் ஓய்வுதியம் இல்லாமை போன்ற குறைகள் இருப்பதாக கூறி நாடு முழுவதும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்து ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொண்டு போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து இன்று காங்கிரஸ் கட்சி மற்றும் சில அமைப்புகள் நாடு முழுவதும் அமைதியான முறையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறது.