சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதலமைச்சர் பகவந்த் மாண் நாளை (மார்ச் 23) மாநிலம் முழுவதுக்கும் பொது விடுமுறை என அறிவித்தார். இதற்கு முன்பாக பகத்சிங்கின் சொந்த மாவட்டமான நவன்ஷகரில் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மாநிலம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதற்கும் விடுமுறை அளிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங் கூறுகையில், 'விடுமுறை அளிப்பதற்குப் பதிலாக மாணவர்களுக்குத் தியாகிகளை பற்றிய பாடம் எடுக்கலாம்' எனக் கூறினார். ’மாணவர்கள் கட்கர்காலனை(பகத்சிங் பிறந்த ஊர்) சென்று பார்த்து தியாகிகளைப் பற்றி தெரிந்து கொள்ளவே இந்த விடுமுறை’ என முதலமைச்சர் பகவந்த் மாண் பதிலளித்தார்.