பெதுல் :மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள கோரடோங்ரி கிராமத்தைச் சேர்ந்த மணப்பெண் லலிதா, குதிரை சவாரி செய்து மண மேடைக்கு வருவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாகப் பரவி வருகிறது.
மணமகள் குதிரை சவாரி செய்வதைக் கண்டு விருந்தினர்களும் பங்கேற்பாளர்களும் ஆச்சரியப்பட்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் பெரும் கரவொலி எழுப்பினர். மணப்பெண் லலிதா, மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள கோரடோங்ரி கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவருக்கும் அம்மாநிலத்தின் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள தண்டிவாடா கிராமத்தைச் சேர்ந்த தீபக் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது, லலிதா குதிரையில் செல்வதைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர்.