தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழர்களுக்குத் துணை நிற்காத பிரதமர் மோடி - ஓவைசி விமர்சனம் - தமிழர்களுக்கு துணை நிற்காத பிரதமர் மோடி

டெல்லி: இலங்கை அரசால் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களுக்குத் துணையாகப் பிரதமர் மோடி நிற்கவில்லை என மக்களவை உறுப்பினர் ஓவைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஓவைசி
ஓவைசி

By

Published : Mar 24, 2021, 10:04 PM IST

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக்கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐநா மனித உரிமை மன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

அதில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்துள்ளதைப் பல்வேறு தலைவர்கள் விமர்சித்தனர். இது குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஓவைசி கூறுகையில், "இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமை மன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இந்தியா புறக்கணித்துள்ளது.

இலங்கை அரசால் படுகொலைசெய்யப்பட்டு ஒடுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குத் துணையாகப் பிரதமர் நரேந்திர மோடி நிற்கவில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details