பெங்களூரு:கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நம்ம மெட்ரோ என்னும் பெயரில் மெட்ரோ சேவை அளிக்கப்பட்டு வருகிறது. பணிக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும் தினமும் இந்த மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் மெட்ரோ ரயிலில் பயணித்த 22 வயது இளம்பெண், பயணத்தின் போது பாலியல் தொந்தரவினை சந்தித்துள்ளார்.
நேற்று (டிச.7) இரவு 9.40 மணியளவில் மெஜஸ்டிக் நோக்கிச் சென்ற மெட்ரோ ரயிலில் அதிகளவு கூட்டம் இருந்துள்ளது. அப்போது அந்த ரயிலில் பயணித்த இளம்பெண்ணுக்கு மர்மநபர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அந்த மர்மநபர் ராஜாஜி நகர் மெட்ரோ நிலையம் வந்ததும் தப்பிக்க முயன்றுள்ளார்.