கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தேவரசிக்கனஹள்ளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாலை 3.30 மணியளவில் சமையல் எரிவாயு கசிவின் காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரு பெண்மணி உயிரிழந்துள்ளார். தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பினுள் மேலும் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.
பெங்களூரு தீ விபத்து - பெண் உயிரிழப்பு; பலர் சிக்கித்தவிப்பு - Bengaluru fire accident
fire accident
18:17 September 21
சமையல் எரிவாயு கொண்டு செல்லும், பைப் லைனில் ஏற்பட்ட கசிவின் காரணமாகவே, இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியிலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலையில்லாதவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் - கெஜ்ரிவால் வாக்குறுதி
Last Updated : Sep 21, 2021, 8:39 PM IST