பெங்களூரு: பெங்களூரு மாநகரில் பரபரப்பாகக் காணப்படும் ஹெப்பல் மேம்பாலத்தின் நடுவில் கார் ஒன்று மற்றொரு கார் ஓட்டுநரைத் தனது வாகனத்தின் முன்புறம் வைத்து இடித்தபடி நகர்ந்தது இது அப்பகுதியில் நின்ற மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் தங்களது மொபைல் மூலம் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதீப் ஹெர்லே என்ற நபர் தனது X பக்கப்பதிவில், "நவம்பர் 28ஆம் தேதி காலை 8.30 மணி முதல் 8.40 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், இதில் கார் ஓட்டுநர் ஒருவார் மற்றொரு கார் ஓட்டுநரைக் காரை வைத்து இடித்தபடி 100 மீட்டர் வரை சென்ற வீடியோ பதிவைப் பதிவிட்டுள்ளார். மேலும் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.