பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை உள்ளிட்ட 8 இடங்களில் மத்திய குற்றப் பிரிவு காவலர்கள் ரெய்டு நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய குற்றப் பிரிவு காவலர்கள் பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று அதிகாலை சோதனை நடத்தினார்கள்.
அப்போது கத்தி, சிகரெட், கஞ்சா, மெமரி கார்டு மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று கூடுதல் ஆணையர் (குற்றம்) சந்தீப் பாட்டில் கூறினார்.