பெங்களூரு:கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ‘வேக் பிட்’ என்ற தலையனை, மெத்தை தயாரிப்பு நிறுவனம், தனது ஊழியர்களுக்கு மதிய நேரத்தில் தூங்கிக்கொள்ள அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஊழியர்கள் மதியம் 2 முதல் 2:30 மணி வரை அலுவலகத்திலேயே தூக்கிக்கொள்ளலாம்.
இதற்காக படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்த நிறுவனம் தரப்பில், "நாசாவின் சமீபத்தைய ஆராய்ச்சியில், 26 நிமிட குட்டித் தூக்கம் உடல் செயல்திறனை 33 விழுக்காடு அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.