தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Bengaluru bandh: அரசு பேருந்தில் பயணிக்கும் அனில் கும்ப்ளே! - அனில் கும்ப்ளே பேருந்தில் பயணம்

பெங்களூருவில் தனியார் பேருந்து, ஆட்டோக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே அரசு பேருந்தில் பயணம் செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அனில் கும்ப்ளே
Anil Kumble

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 4:39 PM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. அதன் பின் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அதனை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் பெண்கள் இலவசமாக அரசு பேருந்தில் பயணம் செய்யும் ‘சக்தி’ திட்டத்தை அம்மாநில அரசு கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி தொடங்கியது.

அன்று முதல் பெண்கள் இலவசமாக அரசு பேருந்தில் அம்மாநிலம் முழுவதும் பயணம் செய்து வருகின்றனர். இந்த ‘சக்தி’ திட்டத்தால் தனியார் பேருந்துக்கள், ஆட்டோக்கள், டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் பலர் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில், அம்மாநில அரசு தொடங்கிய ‘சக்தி’ திட்டத்தினை வாபஸ் பெற வேண்டும் என்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று முழு போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:"மறக்குமா நெஞ்சம்"- மறக்க முடியாதாவறு பதில் கொடுத்த ஏ.ஆர். ரகுமான்!

இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு 32 தனியார் போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு தெரிவுத்துள்ளனர். மேலும், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு தனியார் வாகனங்களை பெரும் அளவு பயன்படுத்தி வருவதால், மாணவர்களின் சிரமத்தை தவிர்க்க பெங்களூரு நகரத்தில் உள்ள சில பள்ளிகள் விடுமுறை அறித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அனில் கும்ப்ளே அரசு பேருந்தில் பயணம் செய்வது போன்ற புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பும் BMTC பயணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் கடந்த 1990ல் இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 2008ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பின்பு தனது ஒய்வை அறிவித்தார். மேலும், இவர் 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்களையும், 271 ஒருநாள் போட்டிகளில் 337 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Senthil Balaji : ஜாமீன் பெறுவதில் இழுபறி... செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு! இந்த முறை யாரால் பிரச்சினை?

ABOUT THE AUTHOR

...view details