உலகளவில் விமான நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான 'ஏர்போர்ட் கவுன்சில் இன்டர்நேஷனல்' (ஏசிஐ), கரோனா காலக்கட்டத்தை சிறப்பாக கையாண்டதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு வாய்ஸ் ஆஃப் தி கஸ்டமர் (Voice of the Customer) விருதை வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஏஐசி இயக்குநர் லூயிஸ் பெலிப்பெ டி ஒலிவேரா கூறுகையில், "பெங்களூரு விமான நிலையம், ஏ.எஸ்.கியூ திட்டத்தின் மூலம் பயணிகளின் கருத்துக்களை சேகரிப்பதில் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை தருவதற்கான உறுதிப்பாட்டை நிரூபிக்க பெரிதும் உதவியது. இதுமட்டுமின்றி, #WeAreHereForYou என்ற ஹேஷ்டேக் மூலம் கரோனா காலக்கட்டத்தில் பல விதமான பிரச்சாரங்களை மேற்கொண்டு விமானப் பயணத்தில் இருந்த அச்சத்தை சரிசெய்து மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினர்" எனத் தெரிவித்தார்.