கொல்கத்தா:மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இளைய சகோதரர், கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இளைய சகோதரர் ஆஷிம் பானர்ஜி, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று(மே.15) சிகிச்சைப் பலனின்றி ஆஷிம் உயிரிழந்தார்.
மேற்கு வங்கத்தில் நேற்றைய (மே.14) நிலவரப்படி, புதிதாக 20,846 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,94,802ஆக உயர்ந்துள்ளது என அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர் முகுல் ராய் அவரது மனைவி கிருஷ்ணா ஆகியோரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் இலவச தடுப்பூசி - மத்திய அரசுக்கு மம்தா கோரிக்கை!