மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டமாக நடைபெற்றுவருகிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு இதுவரை நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னர் இரு தரப்பினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், கூச் பெஹர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், காரில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது கான்வாய் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், திலீப் கோஷின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.