மேஷம்:சூரியன் கன்னியில் சஞ்சரிக்கும் இந்த ஒரு மாத காலமும் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களே ஏற்படும். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் வெற்றி காண்பர். காதலிப்பவர்கள் தங்கள் விஷயத்தில் வலுவாக இருப்பீர்கள்.
பரிகாரம்: தினமும் காயத்ரி மந்திரத்தை உச்சரியுங்கள்.
ரிஷபம்:கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் ரியல் எஸ்டேட் வேலையில் இருப்பவர்களுக்கு உங்களின் சமயோஜித புத்தி உதவும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். மாணவர்களுக்கு இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். கற்றறிந்தவர்களின் சந்திப்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். கடனை திருப்பிச் செலுத்துவதில் வெற்றி கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் சூரியபகவானுக்கு சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.
மிதுனம்:சூரியன் இந்த ஒரு மாத காலம் கன்னி ராசியில் இருப்பார். இதனால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இளைய சகோதர, சகோதரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டாகும். தந்தையுடனான உறவு வலுப்பெறும். தொழிலிலும் முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரம்: தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யுங்கள்.
கடகம்:கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் புதிய காரியங்களைச் செய்வதில் உற்சாகம் அடைவீர்கள். ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசுப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். ஒவ்வொரு வேலையையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள்.
பரிகாரம்: தினமும் காயத்ரி மந்திரத்தை உச்சரியுங்கள்.
சிம்மம்:கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் இந்த ஒரு மாத காலமும் உங்களுக்கு நல்ல பலன்களே கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: தினமும் சூரிய பகவானின் ஏதாவதொரு மந்திரத்தை உச்சரியுங்கள்.
கன்னி:சூரியன் உங்கள் ராசிக்குள் வருவதால் சற்று அகங்காரம் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையிடமோ அல்லது தொழில் பார்ட்னருடனோ உள்ள உறவில் வேறுபாடுகளைக் காணலாம்.
பரிகாரம்: தினமும் சூரியனை வழிபடுங்கள்.
துலாம்:கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் தனிக்கவனம் செலுத்துவது நல்லது. வெளிநாடு செல்லும் போதும் கவனமாக இருக்க வேண்டும். வரும் நாட்களில் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், மேலும் பழைய நோயிலிருந்தும் நிவாரணம் பெறுவீர்கள்.